வெடி வைத்து ஏடிஎம் இயந்திரத்தை தகர்த்தி கொள்ளையடிக்க முயற்சி..! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா..?
கேரளாவில், வெடி வைத்து ஏடிஎம் இயந்திரத்தை தகர்த்தி பணம் கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள்.
கேரளா, பாலக்காடு எழும்பலாசேரி பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள், வெடி வைத்து ஏடிஎம் இயந்திரத்தை தகர்த்தி பணம் கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டாசு வெடித்ததும் சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளருக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இதனை சுதாரித்துக் கொண்ட வங்கி மேலாளர், போலீசாரிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.
வங்கி மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கொள்ளையனை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில், திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்-களில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.