“தோல்வி பயம் வந்து விட்டது” – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Default Image

நாங்கள் மனதால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.

நெருங்கும் இடைத்தேர்தல்:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற இன்னும் 14 நாட்களிலே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பிரதான கட்சிகளின் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ஒருபக்கம் திமுக அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர்.

dmkcampaign

மறுபக்கம் அதிமுகவில் தென்னரசுக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நூதன முறையில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வருவதால், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்திற்கு வெற்றி பிரகாசம்:

twoleaf1

இந்த நிலையில், அதிமுகவில் தென்னரசுக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மேளம் அடித்துக்கொண்டே வீதி வீதியாக நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது செய்தியாளர்  ஆர்.பி.உதயகுமார், இரட்டை இலை சின்னத்திற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தோல்வி பயத்தால் தான் இதனை அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர்.

திமுக அரசால் மக்கள் வேதனை:

cmmkstalinchengalpattu

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து தேர்தலை சந்திக்கிறோம் என தெரிவித்தார். மேலும், திமுக அரசு செய்திருக்கக்கூடிய வேதனைகளால் மக்கள் துயரத்தில் உள்ளனர். மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் கடும் துன்பத்தில் இருக்கிறார்கள். திமுக அரசுக்கு எதிராக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் தோல்வி பயத்தால் 33 அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு, பணத்தை தண்ணீராக வாரி இரைகிறார்கள்.

பணத்தை வாரி இரைக்கும் திமுக:

rb14

நாங்கள் மனதால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறோம், அவர்கள் பணத்தால் இரட்டை இலை வெற்றியை பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அது ஒருபோதும் நடக்காது. இரட்டை இலை தான் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் ஒரே அடையாளமாக உள்ளது. இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அளிக்கும் தீர்ப்பு என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கு விடிவு காலமாக அமையும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்