பிரதமர் பதிலுரையில் வார்த்தை ஜாலம் மட்டுமே இருந்தது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் பதிலுரையில் வார்த்தை ஜாலம் மட்டுமே இருந்தது என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உங்களில் ஒருவன் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு பதிலளித்த முதல்வர், 80% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். மீதமுள்ள வாக்குறுதிகளையும் ஓராண்டுக்குள் நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதிலுரையில் வார்த்தை ஜாலம்
மேலும், பிரதமர் மோடி குறித்து பேசிய முதல்வர், நாடாளுமன்றத்தில், பிபிசி ஆவணப்படம், அதானி விவகாரம் போன்ற சர்ச்சைகளுக்கு பிரதமர் பதிலளிக்கவில்லை. திமுக எம்.பி-க்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் சொல்லவில்லை என்றும், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதில் மக்களுக்கான எதுவுமே இல்லை. பிரதமர் பதிலுரையில் வார்த்தை ஜாலம் மட்டுமே இருந்தது என தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி கேள்வி
ராகுல்காந்தி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது. ராகுல்காந்தியின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது. நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது.
ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மியால் நிகழும் தற்கொலைகள் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தெரியவில்லையா? இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் அவர் சட்டத்திற்கு கையெழுத்து போடுவார்? ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு, கையெழுத்து போடாமல் சட்டமன்றத்தை அவமதிக்கிறார். ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யாமல், அதை அங்கீகரிக்கும் வகையில் ஒன்றிய அரசு வரி விதித்திருப்பது கொடுமையான விஷயம் என தெரிவித்துள்ளார்.
சிறைத் தனிமையைப் போக்கி, குற்றம் செய்தோரையும் நல்வழிப்படுத்தும் புத்தகங்களைச் சிறைவாசிகளுக்கு வழங்கிய பெரியவர் பாலகிருஷ்ணன் போன்றோர் நம் உறவுகளில் பெருக வேண்டும்.