திரிபுராவின் ஒவ்வொரு குடும்பமும் எங்களால் பயனடைந்துள்ளது- மோடி பேச்சு.!
திரிபுராவின் ஒவ்வொரு குடும்பமும் பாஜகவின் கொள்கைகளின் பலன்களைப் பெற்றுள்ளது என பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்-16 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பாஜகவினால் பலன்களைப்பெறாத குடும்பமே திரிபுராவில் இல்லை என்றும், மக்களுக்கு பாஜக எப்போதும் சேவை புரிவதில் தயாராக இருக்கும் என்றும் கூறினார். மேலும் திரிபுரா மாநிலத்திற்கு முன்னேற்றம் கொண்டுவருவதில் அனைத்து வாய்ப்புகளையும் பாஜக பயன்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
நாங்கள் பழிவாங்கும் அரசியலை விட மாற்றத்திற்கான அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார். பாஜக ஆட்சியில் மக்களுக்கு இலவச ரேஷன், மருத்துவ உதவி, வீடுகள் மற்றும் பிற வசதிகள் கிடைத்தன என்று மோடி கூறினார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இன்னும் வீடுகள் கிடைக்காத அனைவருக்கும், மாநிலத்தில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு வீடுகள் வழங்கப்படும் என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன், என்று அவர் மேலும் கூறினார்.