#MCDElection : போட்டியிடும் உறுப்பினர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை..! உச்ச நீதிமன்றம்

Default Image

டெல்லி மேயர் தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

டெல்லி மேயர் தேர்தல் தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநகராட்சி மேயர் தேர்தலில் (MCD) போட்டியிடும் உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஷெல்லி ஓபராய் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து மனு தாக்கல் செய்திருந்தனர்.  அவர்கள் எம்சிடி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் உறுப்பினர்களை வாக்களிக்க டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனுமதித்ததை எதிர்த்து தாக்கல் செய்திருந்தனர்.

Delhimcd el1

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அதில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, 243ஆர் பிரிவின்படி போட்டியிட தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்று கூறினார். இதையடுத்து மாநகராட்சி மேயர் தேர்தலில் (MCD) போட்டியிடும் உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

supreme court

இதற்கிடையில் டெல்லி லெப்டினட் கவர்னர் அலுவலகம் எம்சிடி தேர்தல் பிப்ரவரி 16 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 17ஆம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. இதனால் டெல்லி லெப்டினன்ட்-கவர்னரின் முடிவை எதிர்த்து ஷெல்லி ஓபராய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்