#BREAKING: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது பாதுகாப்பானது – உச்சநீதிமன்றம்

Default Image

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது பயனாளர்களுக்கு பாதுகாப்பானது என உச்சநீதிமன்றம் உத்தரவு.

மேல்முறையீடு மனு தள்ளுபடி:

tnebaadhar

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்பானது என கூறி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜோசப்,நாகரத்னா ஆகியோர் தெரிவித்துள்ளனர். மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதால் எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறியுள்ளனர்.

ஆதார் எண்ணை இணைக்க எதிர்ப்பு:

chennaihighcourt

தமிழகத்தில் மின் மானியம் பெறுபவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சிறப்பு முகாம் மூலம் மின் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். மின் மானியம் பெறுபவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆதாரை இணைக்க தடையில்லை:

tneb and aadhar & High Court

ஆதார் இணைப்பு சமூக நல திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்றும் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு:

sctoday

இந்த உத்தரவு  ரத்து செய்ய கோரி மேல்முறையீடு வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்திருந்தார். தற்போது, இந்த வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்பானது என தெரிவித்து வலக்கை தள்ளுபடி உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்