மாடு எட்டி உதைத்தால் பாஜக இழப்பீடு வழங்குமா.? மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி.!

Default Image

பிப்ரவரி 14ஆம் தேதியை பசுக்களை கட்டிப்பிடிக்க சொல்கிறார்களே, மாடு எட்டி உதைத்து விட்டால் அதற்கு பாஜக அரசு இழப்பீடு வழங்குமா? – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி. 

நாளை பிப்ரவரி 14 தினமானது உலகம் முழுக்க காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினமாக கடைபிடிக்க வேண்டும் என இந்திய விலங்கு நல வாரிய அமைப்பின் தலைவர் அறிக்கை வாயிலாக கேட்டுக்கொண்டார்.

பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினம் : இந்த அறிவிப்பை அடுத்து இணையத்திலும் சரி அரசியல் வட்டாரத்திலும் சரி பலவிதவிமர்சனங்களை இந்த அறிவிப்பு எதிர்கொண்டது. இதனை அடுத்து பிப்ரவரி 14ஆம் தேதி பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வைக்கப்பட்ட இந்த கோரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

பாஜக அரசு இழப்பீடு : தற்போது, இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கூறுகையில், பிப்ரவரி 14ஆம் தேதியை பசுக்களை கட்டிப்பிடிக்க சொல்கிறார்களே, மாடு எட்டி உதைத்து விட்டால் அதற்கு பாஜக அரசு இழப்பீடு வழங்குமா? என கேட்டுக்கொண்டார்.

சட்ட ஒழுங்கு : மேலும் பேசுகையில். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அராஜக அரசை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என கூறினார். இந்தியாவிலேயே மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சீராக இருக்கிறது எனவும், எல்லை பகுதிகளில்  சிலர் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகவும், அதனால், எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர் எனவும் குற்றசாட்டை முன்வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்