ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கை..! 45 கடைகளுக்கு சீல்..!

Default Image

ஜம்மு காஷ்மீரில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையில் 45 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் 2 கடைகள் இடிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததற்கான எதிர்ப்பு நடவடிக்கையில் 45 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது மற்றும் இரண்டு கடைகள் இடிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை பனிஹால் தாசில்தார் எம்ஜிஆர் அகமது தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸ் கடைக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தூண்டுகோலாக இருந்தது.

encroached state land 1

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் ஜனநாயக ஆசாத் கட்சியின் (டிஏபி) முகமது இலியாஸ் வானி மற்றும் காங்கிரஸின் கைசர் ஹமீத் ஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட கடைகளில் 45 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது மற்றும் இரண்டு கடைகள் இடிக்கப்பட்டது. இதில் சீல் வைக்கப்பட்ட கடைகளில் 22 மருந்தகங்கள், 9 மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் ஐந்து ஆப்டிகல் கடைகள் (optical shop) அடங்கும்.

encroached state land 2

பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தில் வைக்கப்பட்ட கடைகள் சட்டத்தின்படி சீல் வைக்கப்பட்டு பனிஹால் நகராட்சிக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன என்று தாசில்தார் கூறினார். பானிஹாலின் பியோபர் மண்டல் தலைவர் பர்வேஸ் ஹமீத் ஷேக், “வாழ்வாதாரத்தை இழந்த ஏழை கடைக்காரர்களின் அவல நிலையை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் இடிக்கப்படாத கடைகளை காலி செய்ய கடைக்காரர்களுக்கு போதுமான நேரத்தை வழங்கிய நிர்வாகத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்” என்றும் கூறினார்.

encroached state land 3

இந்த நடவடிக்கையில் கிட்டத்தட்ட 50 கடைகள் மூடப்பட்டதால் 300க்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளதாகவும், ஏழை கடைக்காரர்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு, கடைகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு விரைவில் திரும்பக் கொடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் மேலும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்