“கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டோம்” – டிஜிபி

Default Image

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் விவரங்கள் கிடைத்துவிட்டது என டிஜிபி தகவல்.

டிஜிபி செய்தியாளர் சந்திப்பு:

DGPATMTHEFT

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது ஹரியானவை சேர்ந்தவர்கள் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி, கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டோம். அவர்களின் முழு விவரம் கிடைத்துள்ளது. விரைவில் பிடித்து கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தை மீட்டுவிடுவோம் என கூறினார்.

ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல்நாள் நள்ளிரவு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வெளிமாநில கொள்ளையர்கள் போலி பதிவு எண் கொண்ட டாடா சுமோவில் வந்ததாக கூறப்படுகிறது.

ATMTHEFT

இந்த சம்பவத்தை தொடர்ந்த்து, கொள்ளையர்களை பிடிக்க தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் விடிய விடிய வாகன தணிக்கையில் காவல்த்துறையினர் ஈடுபட்டனர். தீவிர வாகன தணிக்கை மற்றும் தனியார் விடுதிகளில் சோதனை நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார். 

தீவிர கண்காணிப்பில் காவல்த்துறையினர்:

டிஜிபி உத்தரவை தொடர்ந்து திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மறுபக்கம், 9 சாலைகளில் உள்ள சுமார் 400 சிசிடிவி காட்சி பதிவுகள்  மூலம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. எந்த சோதனை சாவடிகளிலும் கொள்ளையர்கள் சிக்காமல் சென்றுள்ள நிலையில் தனிப்படை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

TNPOLICE13

கொள்ளையர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களோ என்றும் ஒருகோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தனர். இந்த நிலையில், கொள்ளையில் ஈடுபட்டது ஹரியானவை சேர்ந்தவர்கள். அவர்களின் முழு விவரம் கிடைத்துள்ளது, விரைவில் பிடித்து விடும் எனவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்