சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..!

Default Image

பிரதமர் நரேந்திர மோடி  அவர்கள், பெங்களூருவில் உள்ள யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் 14-வது ஏரோ இந்தியா 2023-ஐ  தொடங்கி வைத்தார். 

பிரதமர் நரேந்திர மோடி  அவர்கள், பெங்களூருவில் உள்ள யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் 14-வது ஏரோ இந்தியா 2023-ஐ  தொடங்கிவைத்துள்ளார்.  80க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஏரோ இந்தியா 2023 நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

ஏரோ இந்தியா 2023 

as2023 modi

சுமார் 30 நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய மற்றும் இந்திய நிறுவனங்களின் 65 CEO-க்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். இந்த விமான கண்காட்சி இன்று தொடங்கி 5 நாட்கள்  நடைபெறவுள்ளது.

சாகசங்கள் 

aeroindia 2

 

போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் சாகசங்களை பிரதமர் மோடி வெளிநாட்டு பிரதிநிதிகள் பார்த்து வருகின்றனர். விமான கண்காட்சியில் மொத்தம் 807 அரங்குகள் அமைக்கப்பட இருப்பதாகவும், அவற்றில் 107 அரங்குகள் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான கண்காட்சி காரணமாகவும், பிரதமர் மோடி வருகை காரணமாகவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த விமான கண்காட்சியை கண்டுகளிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒரு நபர் 2 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெற்றுக் கொண்டு கண்காட்சியை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்