Turkey-Syria Earthquake:துருக்கி, சிரியாவில் பலி எண்ணிக்கை உயர்வு; 28,000-ஐ நெருங்கியது.!
துருக்கி, மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 28,000-ஐ நெருங்கியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவை கடந்த திங்கட்கிழமை(பிப்-6) தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 28,192 ஐ எட்டியுள்ளது என்று சிஎன்என் தெரிவித்துள்ளது.
துருக்கியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24,617 ஆக உயர்ந்துள்ளது என்று துருக்கிய துணை ஜனாதிபதி ஃபுவாட் ஒக்டே செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சிரியாவின் வடமேற்கில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இறப்புகளின் எண்ணிக்கை 3,575 ஆக உள்ளது என்று , ஒயிட் ஹெல்மெட்ஸ் சிவில் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் 1,408 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று நாட்டின் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டிய சிரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பிப்ரவரி 6 அன்று துருக்கியில் நிலநடுக்கத்தில் இருந்து காணாமல் போன இந்தியர் ஒருவர் மாலத்யாவில் உள்ள ஒரு ஹோட்டலின் இடிபாடுகளுக்கு அடியில் இறந்து கிடந்தார் என்று துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் சனிக்கிழமை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. இறந்தவர், விஜய் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் துருக்கிக்கு வணிக பயணமாக சென்றிருந்ததும் தெரியவந்துள்ளது.
We inform with sorrow that the mortal remains of Shri Vijay Kumar, an Indian national missing in Turkiye since February 6 earthquake, have been found and identified among the debris of a hotel in Malatya, where he was on a business trip.@PMOIndia @DrSJaishankar @MEAIndia
1/2— India in Türkiye (@IndianEmbassyTR) February 11, 2023