தனித்துவிடப்பட்டதா அதிமுக.? இலங்கை பறந்த தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள்.!

Default Image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் . கூட்டணி கட்சியான பாஜக மாநில தலைவர்கள் இலங்கை சென்றுள்ளனர். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஆளுங்கட்சியான திமுக, தங்கள் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இவிகேஎஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். ஆனால், அதே சமயம் எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக தரப்பு வேட்பாளர் தேர்வு என்பது இழுபறியாக தொடர்ந்து வந்தது.

இபிஎஸ் – ஓபிஎஸ் – பாஜக : எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவையும்,  ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செந்தில் முருகன் என்பவரையும் வேட்பாளர்களாக அறிவித்தது. அதே போல கூட்டணியில் இருந்த தேசிய கட்சியான பாஜக தனது நிலைப்பாட்டை தெளிவாக சொல்லாமல் தொடர் ஆலோசனையில் ஈடுப்பட்டு வந்தது .

தென்னரசு வேட்பாளர் : அதற்கு பிறகு உச்சநீதிமன்ற உத்தரவு, பொதுக்குழு  உறுப்பினர்கள் முடிவு என ஒரு வழியாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் தென்னரசு அதிமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவருக்கு இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் அண்மையில் ஒதுக்கி விட்டது.

அதிமுக பிரச்சாரம் : அதற்கு இடையில் நடந்த சில அதிமுக பிரச்சார கூட்டத்தில் கூட்டணி கட்சியான பாஜக பெயர் மற்றும் நோட்டீஸ்களில் பாஜக தலைவர்களின் புகைப்படங்களை அதிமுக தவிர்த்தது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக பார்க்கப்பட்டது.

பாஜக ஆதரவு : ஆனால், அதற்குப் பிறகு பாஜகவானது, அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு முழு ஆதரவு என அறிக்கை வெளியிட்டது. மேலும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தையும் மேற்கொள்வோம் எனவும் அண்மையில் பாஜக தலைவர்கள் அறிவித்தனர்.

தீவிர பிரச்சாரத்தில் திமுக : திமுக கூட்டணியில் உள்ள  காங்கிரஸ் வேட்பாளராக இவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் நேரம் ஒதுக்கி சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது.

 

பாஜக – இலங்கை : ஆனால், அதிமுக சார்பில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய கட்சியான பாஜக முக்கிய தலைவர்கள் எல்.முருகன், அண்ணாமலை ஆகியோர் தற்போது அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளனர். இதனால் அதிமுக இடைத்தேர்தலில் தனித்து விடப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

தற்போதைய நிலை :  பாஜக தலைவர் அண்ணாமலை  அண்மையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கை பயணத்தை முடித்துவிட்டு பிரச்சாரத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக களம் இறங்குவோம் என அறிவித்துள்ளார். இதனால் இலங்கை பயணம் முடிந்து அவர்கள் வந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை தெரிய வரும் அதுவரை அதிமுக தனித்த தேர்தல் களத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்