246 கிமீ தூரம்! டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Default Image

டெல்லி, மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட டெல்லி – தௌசா – லால்சோட் சாலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர்.

விரைவுச் சாலையின் முதல் கட்டப்பகுதி:

e11

டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் முதல் கட்டப் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு அர்பணிக்கிறார். அதன்படி, டெல்லி, மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட 246-கிமீ டெல்லி-தௌசா-லால்சோட் சாலை திறக்கப்படுகிறது. இதன் மூலம்  டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு பயண செய்ய 5 லிருந்து சுமார் 3.5 மணி நேரமாக குறைக்கப்படும். இதனால் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலை:

expreesrode

டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தின் கீழ் 1,386 கிமீ நீளமுள்ள விரைவுச்சாலை இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலையாக இருக்கும். இது டெல்லி மற்றும் மும்பை இடையேயான பயண தூரத்தை 1,424 கிமீ முதல் 1,242 கிமீ வரை அதாவது 12% குறைக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும்,  எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் முழுமையாக முடிந்தவுடன் டெல்லி-மும்பை பயண நேரத்தை 24 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாகக் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாநிலங்கள் இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலை திட்டம்:

express12pm

டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களை கடந்து கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா மற்றும் சூரத் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது. இந்த நிலையில், டெல்லி – மும்பை இடையிலான விரைவுச் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக  246 கிமீ தொலைவிற்கு டெல்லி – தௌசா – லால்சோட் பகுதி ரூ.12,150 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள சாலை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
Geethajeevan
Yogi Babu
Southwest Bay of Bengal
M K Stalin
chicken pox (1)
orange alert tn