ஆளுநர் மாளிகை வளாக பள்ளிவாசல் மட்டும் ஏன் திறக்கப்படவில்லை? – ஜவாஹிருல்லா
ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளிவாசல் மட்டும் ஏன் இன்னும் திறக்கப்படவில்லை என ஜவாஹிருல்லா கேள்வி.
ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளிவாசல் மட்டும் பூட்டப்பட்டு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக பூட்டப்பட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு, இயல்புநிலைக்கு திரும்பிவிட்டது.
ஆனால், ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளிவாசல் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை, ஏன் என விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்என் ரவி உரிய கவனமெடுத்து பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகை நடைபெற ஆவண செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.