முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்க்கட்டும்! – சீமான்

Default Image

சமூக ஆர்வலர்களையும் அடக்கி ஒடுக்குவதுபோல, அப்போது முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்க்கட்டும் என சீமான் ட்வீட். 

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்க்கு அந்த பகுதியை சுற்றியுள்ள 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று 200-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

Seeman reports

இவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக சென்ற பூவுலக நண்பர்கள் அமைப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்து 200வது நாளாக போராடி வரும் மண்ணின் மக்களுக்கு ஆதரவளிக்கச் சென்ற பூவுலக நண்பர்கள்  அமைப்பைச் சேர்ந்த தம்பி வெற்றி சில்வன்  அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

போராட்டத்தின் தொடக்கநிலையிலேயே பரந்தூர் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுபோல, மீண்டும் அம்மக்களைச் சந்திக்க நானே நேரடியாகக் களத்திற்குச் செல்வேன். சூழலியல் அமைப்புகளையும், சமூக ஆர்வலர்களையும் அடக்கி ஒடுக்குவதுபோல, அப்போது முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்க்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்