டாஸ்மாக் ஊழியர்கள்… அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கைது.! திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்.!
கோவையில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கண்டன அறிக்கை வெளியாகியுள்ளது.
கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களின் அவ்வபோது பணி நீக்கம் செய்வது பணி மாற்றம் செய்து மிகவும் கண்டிக்கத்தக்கது எனகும், தொழிற்சகங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கும் அதிமுக சார்பில் தற்போது கண்டன அறிக்கை வெளியாகி உள்ளது.
அந்த அறிக்கையில், கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் அவ்வப்போது பணி இடமாற்றம் செய்யப்படுவதும், பணிநீக்கம் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பாக நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டு இருந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்INTUC மற்றும் பாமக தோளிச்சங்கத்தினர் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இருந்தனர்.
ஆனால், திடீரென்று ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக தெரிவித்து அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட தொழிலாளர்களை சட்டவிரமாக கைது செய்து நேற்று மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்து உள்ளனர்.
இந்த திமுக அரசின் அராஜக செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன் தமிழகம் முழுவதும் பல்வேறு வகைகள் ஊழல்கள் அராஜகங்கள் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் காலம் வெகுவிரைவில் வரும் என்பதை தமிழக அமைச்சர் முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.