விவசாயிகள் தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு மின்கோபுரம் அமைக்க ஒத்துழைக்க வேண்டும்!மின்துறை அமைச்சர் தங்கமணி
மின்துறை அமைச்சர் தங்கமணி,தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழகச் சட்டப்பேரவையில் மின்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து, விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் வேளாண்மை பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
அதற்குப்பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு விளைநிலங்களில் உள்ள மின்கோபுரங்கள் வழியாகத்தான் மின்சாரம் கொண்டுவரப்படுவதாகத் தெரிவித்தார். விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும்போது நிலத்தின் மதிப்பைவிட இரண்டரை மடங்கு மூன்றரை மடங்குத் தொகை விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் மின் தேவையைக் கருத்தில் கொண்டும் மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.