டாக்டர் அம்பேத்கர், இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சை மேடை நாடகம்.! 6 கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட்.!
கர்நாடகா, பெங்களூருவில் ஒரு கல்லூரியில் ஒரு மேடை நாடகத்தில் பட்டியலின சமூகம் , இடஒதுக்கீடு உள்ளிட்டவை பற்றி தவறாக சித்தரித்ததாக கூறி மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரி விழாவில் மேடை நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த மேடை நாடகத்தில் சாதிய குறியீடு இருக்கும் வகையில் சர்ச்சை கருத்துக்கள் பதிவிட்டதாக கூறி சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மேடை நாடகத்தில் டாக்டர் அம்பேத்கர் பற்றியும், அதே போல இட ஒதுக்கீடு பற்றியும் தவறான கருத்துக்கள் மேடை நாடகத்தில் அரங்கேறியதாக கூறப்படுகிறது.
அந்த மேடை நாடகத்தில் அம்பேத்கார் பெயரை தவறாக எழுதி , இடஒதுக்கீடு குறித்து தவறாக சித்தரித்து அந்த மேடை நாடகம் அரங்கேறியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து மேடை நாடகம் எழுதிய சம்பந்தப்பட்ட மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
மேலும், மும்பையினை சேர்ந்த பட்டியலின சமூக ஆர்வலர் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 153A, 295, 499, 500, 503, 504, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்ற புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.