கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் தவறி வருகிறார் – வேல்முருகன்

Default Image

மத்திய அரசு நிர்பந்திக்கிறது என்பதற்காக தமிழக அரசு துணை போவதா? என வேல்முருகன் பேச்சு. 

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான  ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த பரந்தூர் விமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Protest Against Parandur Airport

இந்த 13 கிராம மக்களின் போராட்டம் 200-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஊர்மக்கள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.

velmurugan

இந்த நிகழ்வில் உரையாற்றிய வேல்முருகன், அதிமுகவிற்கும் திமுகவிற்கும் பெரிய வித்தியாசமில்லை. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் தவறி வருகிறார் முதல்வர் ஸ்டாலினின் இரட்டை நிலைப்பாடு தெரிகிறது. மத்திய அரசு நிர்பந்திக்கிறது என்பதற்காக தமிழக அரசு துணை போவதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்