டெல்லி கலால் வழக்கு.! ஆந்திர எம்பி மகனை கைது செய்த அமலாக்கத்துறை.!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்பி மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டியின் மகன் ராகவ் மகுண்டா கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் மதுபான கொள்கை அமல்படுத்தியது தொடர்பாக அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து பல்வேறு அதிரடி கைது நடவடிக்கைகளில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.
அமலாக்கத்துறையினர் கைது : இந்த கைது நடவடிக்கையில் தற்போது சிக்கியிருப்பவர் ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்பி மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டியின் மகன் ராகவ் மகுண்டா ஆகும். இவரை 2 நாள் விசாரணைக்கு வரவழைத்து அவரிடம் போதிய விசாரணை செய்து பின்னர் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு : இதே வழக்கில் முன்னதாக, பஞ்சாப்பைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் மல்ஹோத்ரா மற்றும் ஆம் ஆத்மியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயரின் உதவியாளர் ராஜேஷ் ஜோஷி ஆகியோர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யபட்டனர். கோவா தேர்தலுக்காக ஜோஷி நாயர் என்பவரிடம் பணம் பெற்றதாக புகார் எழுந்தது. அப்போது அந்த பணம் பற்றி விசாரிக்கையில் அந்த பணத்திற்கும் டெல்லி மதுபான கொள்கை முறைகேடுவுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு அந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.