நவீன சேமிப்பு தளங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

Default Image

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்பு தளங்கள் திறந்து வைத்தார் முதல்வர்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்பு தளங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் நவீன சேமிப்பு தளங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நவீன சேமிப்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

modernstorage

தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் ரூபாய் 105.08 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையுடன் கூடிய 106 நவீன நெல் சேமிப்பு தளங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்