வசூலில் மாஸ் காட்டிய கவினின் “டாடா”.! முதல் நாளில் எத்தனை கோடி தெரியுமா..?
ரகவின் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான ” டாடா” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை கணேஷ் கே பாபு என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் அபர்ணா தாஸ் ஹீரோயினாகவும், பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபௌஸி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். காதல் கதையை சென்டிமண்டை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும், படத்தில் சில எமோஷனல் காட்சிகள் நம்மளை அழ வைத்து விடுகிறது எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
எனவே படம் விமர்சன ரீதியாக முதல் நாளிலே வெற்றியை பெற்றுவிட்டது என்றே கூறலாம். இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
அதன்படி, டாடா திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. படத்திற்க்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது என்பதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.