#BREAKING: ஈரோடு – வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு!
ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தலைமையில் பெல் நிறுவன அதிகாரிகள் வாக்கு இயந்திரங்க சரிபார்ப்பு.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியுள்ளது. ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தலைமையில் பெல் நிறுவன அதிகாரிகள் வாக்கு இயந்திரங்களை சரிபார்க்கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் இயந்திரங்கள் சரிபார்க்கப்டுகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியான நிலையில், கூடுதல் வாக்கு இயந்திரங்கள் தேவைப்படுமா என்றும் ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார்.
கூடுதல் வாக்கு இயந்திரங்கள் வைகை ஏற்பாடு:
இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கூடுதல் வாக்கு இயந்திரங்களை வைக்க ஏற்பாடு செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இடைத்தேர்தலுக்கு ஏற்கனவே, 286 வாக்கு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொல்லம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளி கிடங்கில் 1,000 வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்படுகிறது.