நாடாளுமன்றத்தில் அதானி குறித்த விவாதங்களை திசைதிருப்பவே பசு கட்டிபிடிப்பு உத்தரவு – சு.வெங்கடேசன் எம்.பி
அதானி குறித்து எந்த விமர்சனமும் வராததால் அரசு அது குறித்து வாய்திறக்கவில்லை என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் காதலர் தினமானது கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் இந்திய விலங்குகள் நல வாரிய அமைப்பானது, வரும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அரவணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்த அறிவிப்பு விமர்சனத்துக்குள்ளானது. இதனையடுத்து, பசு அணைப்பு தினத்தை கொண்டாடுவதற்கான இந்திய விலங்கு நல வாரியத்தின் கோரிக்கையானது திரும்பப் பெறப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாடாளுமன்றத்தில் அதானி குறித்த விவாதங்களை திசைதிருப்பவே பசு கட்டிபிடிப்பு உத்தரவு வெளிவருகிறது என்று நண்பர்கள் சொன்னார்கள். “கடுமையான விமர்சனங்கள்”வந்த நிலையில் இப்பொழுது உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. அதானி குறித்து எந்த விமர்சனமும் வராததால் அரசு அது குறித்து வாய்திறக்கவில்லை.’ என பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அதானி குறித்த விவாதங்களை திசைதிருப்பவே பசு கட்டிபிடிப்பு உத்தரவு வெளிவருகிறது என்று நண்பர்கள் சொன்னார்கள்.
“கடுமையான விமர்சனங்கள்”வந்த நிலையில்
இப்பொழுது உத்தரவு திரும்ப பெறப்படுகிறது.அதானி குறித்து எந்த விமர்சனமும் வராததால் அரசு அது குறித்து வாய்திறக்கவில்லை. pic.twitter.com/rc8hjV3hXg
— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 10, 2023