அமைச்சர் மீதே அரிப்பு பொடியா..! வெளியாக வீடியோ..!
யாத்திரையின் போது அமைச்சர் பிரஜேந்திர சிங் யாதவ் மீது அரிப்பு பொடி தூவப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச அமைச்சர் பிரஜேந்திர சிங் யாதவ் மீது அடையாளம் தெரியாத நபர் அரிப்புப் பொடியை தூவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜகவின் விகாஸ் ரத யாத்திரை நடைபெற்றது.
மாநில அமைச்சர் பிரஜேந்திர சிங் யாதவ்வின் சட்டமன்றத் தொகுதியான முங்காலியில் உள்ள ஒரு கிராமத்தின் வழியாக யாத்திரை சென்று கொண்டிருந்தது. அப்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பிரஜேந்திர சிங் யாதவ் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரிப்பு பொடியாய் தூவியுள்ளார்.
இதனால் அவருக்கு கடுமையான அரிப்பு ஏற்பட்டுள்ளது. அரிப்பை தாங்க முடியாமல் தனது குர்தாவை கழற்றி பாட்டில் தண்ணீரில் அரிப்பு ஏற்பட்ட இடத்தை கழுவினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
अशोकनगर, मध्य प्रदेश
जनसंपर्क पर निकले मंत्री को लगाया #खुजली पाउडर। यात्रा रोक, नहाना पड़ा।
PHE मंत्री / भाजपा नेता बृजेंद्र सिंह यादव को जनसंपर्क के दौरान किसी ने लगाया खुजली पाउडर।
खुजा खुजा कर हुआ था बुरा हाल ! pic.twitter.com/w5GZtCWmyy
— काश/if Kakvi (@KashifKakvi) February 9, 2023