பீகாரில் மாவோயிஸ்ட்டுகள் ! நாலு பேரை கடத்தியதால் பரபரப்பு..!
பீகாரில் ஹவேலி காராக்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான காரக்பூர் ஏரியின் அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 4 தொழிலாளர்களை மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றுள்ளனர். மேலும் நிறுவனத்திலிருந்த இயந்திரங்களையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜிதேந்திர மிஸ்ரா கூறுகையில், ”காரக்பூர் ஏரி அருகே அமைந்திருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் நேற்றிரவு 50க்கும் அதிகமான பயங்கரவாதிகள் புகுந்து அங்குள்ள தொழிலாளர்களை தாக்கியுள்ளனர். மேலும் அங்கிருந்த 4 பொக்லைன் இயந்திரங்கள், 2 டிரக்குகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்திய மாவோயிஸ்ட்டுகள், 4 தொழிலாளர்களையும் கடத்தி சென்றுள்ளனர்.
மாவோயிஸ்ட்டுகள் மக்களை கடத்தி துன்புறுத்தி கொல்லும் இந்த பயங்கரமான சம்பவங்களை தடுப்பதற்காக முங்கெர், ஜாமுய் மற்றும் லக்ஹிசராய் ஆகிய மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” எனக் கூறினார்.