3வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது 5வது இடத்தில்.! காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றசாட்டு.!
உலகில் 3வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரதமனது மத்திய அரசின் செயல்பாடுகளால் தற்போது 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. – காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மக்களவையில் குற்றசாட்டு.
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை, 2023-2024க்கான மத்திய பட்ஜெட் தாக்கல், அதன் பிறகு கூட்டதொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் மக்களவையில் பிரதமர் மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் பேசினார். அதே போல நேற்று மாநிலங்களவையில் நேற்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பேசினார் .
இதனை தொடர்ந்து இன்று உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். அதில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மக்களவையில் பேசுகையில் உலகில் 3வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரதமனது மத்திய அரசின் செயல்பாடுகளால் தற்போது 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுத்த எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் அரசு இதுவரையில் நிறைவேற்றி தரவில்லை என குற்றம் சாட்டினார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.