ஈரோடு – கூடுதல் வாக்கு இயந்திரங்கள் வைக்க ஏற்பாடு!

Default Image

ஈரோடு இடைத்தேர்தலில் கூடுதல் வாக்கு இயந்திரங்களை வைக்க ஏற்பாடு என மாநில தேர்தல் ஆணையம் தகவல்.

கூடுதல் வாக்கு இயந்திரம்: 

election1

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கூடுதல் வாக்கு இயந்திரங்களை வைக்க ஏற்பாடு செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இடைத்தேர்தலுக்கு ஏற்கனவே 286 வாக்கு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொல்லம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளி கிடங்கில் 1,000 வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓரிரு நாட்களில் வாக்கு இயந்திரங்கள் ஒப்படைப்பு:

votem12

21 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 8 விவிபேட் இயந்திரங்களும் ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டன. வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு ஓரிரு நாளில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதனிடையே, ஈரோடு கிளைக்கு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகலின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டத்தை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு:

nomination83

பிரதான கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்புமனு பரிசீலனையில் 121 வேட்புமனுக்களில் 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்பட 83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. வேட்பு மனு ஏற்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தின் சார்பில் 191 சின்னங்கள் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை:

erodeelectiontn

ஒருபக்கம் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தாளாது வேட்பாளருக்காக பல்வேறு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபக்கம், இடைத்தேர்தலுக்காக மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடைவடிக்கைகளை மேற்க்கொட்னு வருகிறது. அந்தவகையில், வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் கூடுதல் வாக்கு இயந்திரங்களை வைக்க ஏற்பாடு செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்