முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா சதம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது முதல் சதத்தை அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 9வது சதத்தை பூர்த்தி செய்தார் ரோஹித் சர்மா. நாக்பூரில் நடைபெற்று வரும் போட்டியில் 171 பந்துகளில் 14 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்துள்ளார்.
இதனிடையே, நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை கடந்து இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இந்தியா தற்போது முன்னிலை பெற்று உள்ளது.
தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. காலத்தில் ரோஹித் சர்மா 105 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 12 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். ரோஹித் தற்போது இந்திய மண்ணில் 8 சதங்கள் உட்பட டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 சதங்களை அடித்துள்ளார்.