எனது படங்களில் சிறந்த ஒன்று ‘மகான்’…கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி தெரிவித்த விக்ரம்.!

Default Image

‘மகான்’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு நடிகர் விக்ரம் நன்றி தெரிவித்துள்ளார்.

மகான் 

1YearOfMAHAANism
1YearOfMAHAANism [Image Source : Twitter]

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா, சனந்த், வேட்டை முத்துக்குமார், அக்ஷத் தாஸ், உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்ற திரைப்படம் மகான். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

மகான் படம் வெளியாகி 1 ஆண்டுகள் ( 1 year of Mahaan)

1YearOfMAHAANism
1YearOfMAHAANism [Image Source : Twitter]

இந்த நிலையில் மகான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் டிவிட்டரில் 1 year of Mahaan என்ற ஹஸ்டேக்கை  ட்ரெண்ட் செய்து மகான் 2-வருமா..? என்பது போல பதிவிட்டு வருகிறார்கள்.

கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்த விக்ரம் 

மகான் திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டுகள் நிறுவடைந்ததையடுத்து, விக்ரம் இயக்குனர் கார்த்திக்சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விக்ரம் டிவிட்டரில் கூறியிருப்பதாவது ” எனது சிறந்த திரைப்படம் மற்றும் கதாபாத்திரங்களில் ஒன்றின் 1 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறேன். அதில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி “நன்றி கார்த்திக்” என குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்