#Breaking : மதுரை எய்ம்ஸ் விவகாரம்..! மக்களவையில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு..!
மக்களவையில் மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்திய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, “போதிய ஆசிரியர் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாத மருத்துவக் கல்லூரிகளை இயக்க நான் அனுமதிக்க மாட்டேன். மதுரையில் எய்ம்ஸ் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுகாதாரத்தை அரசியலின் பிரச்சினையாக ஆக்காதீர்கள்” என்று சுகாதார அமைச்சர் மாண்டவியா ஆவேசமாக கூறினார்.
இதனையடுத்து காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் அவரது பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் இருந்து காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.