யாருடன் கூட்டணி..? தேர்தல் வரும்போது அறிவிப்போம்..! – பிரேமலதா
இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா? அல்லது பணநாயகமா? அது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே என பிரேமலதா பேட்டி.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் வரும்போது யாருடன் கூட்டணி என அறிவிப்போம்.
தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. காலசூழல், கருத்து முரண்பாட்டால் தனித்து போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா? அல்லது பணநாயகமா? அது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே என தெரிவித்துள்ளார்.
மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் குறித்து அவர் கூறுகையில், ‘ரூ. 1 கோடியில் நினைவு மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைத்துவிட்டு மீதம் இருக்கும் தொகையில் மாணவர்களுக்கு பேனா வாங்கி கொடுக்கலாம்.
எழுதாத பேனாவுக்கு நினைவுச்சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது; அதுவும் கடலில் வைப்பது என்பது தேவையில்லாதது என தெரிவித்துள்ளார்.