நட்பின் இலக்கணத்தை நாட்டுக்குக் கற்றுக்கொடுத்தார் பிரதமர்..! – சு.வெங்கடேசன் எம்.பி
நட்பின் இலக்கணத்தை நாட்டுக்குக் கற்றுக்கொடுத்தார் பிரதமர் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் குடும்பத்திற்கு சில கேள்விகளை எழுப்பினார். நேரு இவ்வளவு பெரிய மனிதராக இருந்திருந்தால், அவரது குடும்பத்தில் ஏன் அவரது குடும்பப் பெயரை யாரும் பயன்படுத்தவில்லை? என கேள்வி எழுப்பி இருந்தார்.
அவர்பேசுகையில், காந்தி, நேரு, எம் ஜி ஆர், என் டி ஆர், கருணாநிதி ஆகியயோரைப்பற்றி பேசியிருந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சு குறித்து சு.வெங்கேசன் எம்.பி ட்விட் செய்திருந்தார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘காந்தி, நேரு, எம் ஜி ஆர், என் டி ஆர், கருணாநிதி ஆகியயோரைப்பற்றி இரு அவைகளிலும் கேள்வி எழவில்லை. ஆனால் அவர்களைப்பற்றிப் பேசினார் பிரதமர். எல்லோரும் எழுப்பியது அதானியைப் பற்றிய கேள்வி. ஆனால் அதற்கு வாய்த்திறக்கவில்லை. நட்பின் இலக்கணத்தை நாட்டுக்குக் கற்றுக்கொடுத்தார் பிரதமர்.’ என விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
காந்தி, நேரு, எம் ஜி ஆர், என் டி ஆர், கருணாநிதி ஆகியயோரைப்பற்றி இரு அவைகளிலும் கேள்வி எழவில்லை.
ஆனால் அவர்களைப்பற்றிப் பேசினார் பிரதமர்.எல்லோரும் எழுப்பியது அதானியைப் பற்றிய கேள்வி.
ஆனால் அதற்கு வாய்த்திறக்கவில்லை.
நட்பின் இலக்கணத்தை நாட்டுக்குக் கற்றுக்கொடுத்தார் பிரதமர். pic.twitter.com/1UtMHSDi5I
— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 10, 2023