Today’sLive : காங்கிரஸ் உறுப்பினர் ராஜ்யசபாவில் இருந்து இடைநீக்கம்.!

Default Image

காங்கிரஸ் உறுப்பினர் ராஜ்யசபாவில் இருந்து இடைநீக்கம் :

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில், காங்கிரஸ் உறுப்பினர் ரஜனி பாட்டீல் சபை நடவடிக்கைகளை பதிவு செய்ததற்காக ராஜ்யசபாவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2023-02-10 06:43 PM

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மருத்துவமனையில் அனுமதி :

டேராடூனில் இளைஞர்கள் மீது போலீசார் நடத்திய தடியடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்தின் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Readmore : உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மருத்துவமனையில் அனுமதி..!

2023-02-10 06:11 PM

பசுவை கட்டியணைக்கும்  தினம் திரும்ப பெறப்பட்டது :

இந்தியாவில்  இந்திய விலங்குகள் நல வாரிய அமைப்பானது, வரும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அரவணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டது. இந்த அறிக்கையானது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டதால் பசுவை கட்டியணைக்கும் தினத்தை (Cow Hug Day) விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றுக் கொண்டது.

Readmore : பிப்ரவரி 14 ‘பசு கட்டிப்பிடிப்பு தினம்’ இல்லை..! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

2023-02-10 05:20 PM

அதானி விவகாரம் குறித்து, செபி அமைப்பானது திங்கள் கிழமை பதில் கூற என உச்சநீதிமன்றம் உத்தரவு : 

இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு அதானி விவகாரம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரிக்கையில், இந்த பங்கு சந்தை நிலவரத்தை மத்திய அரசு சார்பில் கண்காணித்து வரும் செபி அமைப்பு அதானி குழும விவகாரம் குறித்து திங்கள் கிழமை பதில் கூற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Readmore : அதானி குழும விவகாரம்.! மத்திய அரசின் செபி அமைப்பு பதில் கூற உச்சநீதிமன்றம் உத்தரவு.!

2023-02-10 05:00 PM

மும்பை-சோலாப்பூர் வந்தே பாரத் ரயில் :

மும்பைலிருந்து சோலாப்பூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Mumbai-Solapur Vande Bharat Express
[Image Source : Twitter/@ANI]

2023-02-10 03:59 PM

நிஜாமின் கலாச்சார சின்னங்களை அழிப்போம் என பாஜக தலைவர் பண்டி சஞ்சய் பேச்சு:

தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் பண்டி சஞ்சய், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகத்தின் குவிமாடங்கள் உட்பட நிஜாமின் கலாச்சார சின்னங்களை அழித்து விடுவோம். இந்திய மற்றும் தெலுங்கானா கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தகுந்த மாற்றங்களைச் செய்வோம்” என்று கூறினார்.

Readmore : நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் புதிய தலைமை செயலக மேற்பகுதியை இடிப்போம்.! பாஜக மாநில தலைவர் பரபரப்பு.!

2023-02-10 03:35 PM

அமைச்சர் பிரஜேந்திர சிங் யாதவ் மீது அரிப்பு பொடி தூவப்பட்டது :

மத்தியப் பிரதேச அமைச்சர் பிரஜேந்திர சிங் யாதவ் மீது அடையாளம் தெரியாத நபர் அரிப்புப் பொடியை தூவியதால், குர்தாவை கழற்றி கழுவும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அமைச்சரின் சட்டமன்றத் தொகுதியான முங்கோலியில் உள்ள ஒரு கிராமத்தின் வழியாக அவரது விகாஸ் யாத்திரை சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

Readmore : அமைச்சர் மீதே அரிப்பு பொடியா..! வெளியாக வீடியோ..!

2023-02-10 02:49 PM

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி :

இந்தியாவில் செயல்பட்டு வரும், சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி செர்வாவாக், இந்தமாதம் சந்தைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் சந்தையில் HPV தடுப்பூசியின் விலை இரண்டு டோஸ் குப்பிகளுக்கு ₹ 2,000 ஆகும், இது மற்ற HPV தடுப்பூசிகளை விட மிகக் குறைவு. மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் சங்கங்கள் நிறுவனம் தனது HPV தடுப்பூசியை நாடிய நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் இந்த மாதம் முதல் CERVAVAC ஐ தனியார் சந்தையில் வெளியிடத் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Readmore : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி..! விலை எவ்வளவு தெரியுமா..?

2023-02-10 02:09 PM

பிபிசி வழக்கில் உச்ச நீதிமன்றம் :

2002 குஜராத் கலவரம் தொடர்பான ‘இந்தியா’ மோடி கேள்வி (India: The Modi Question) என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பியதை அடுத்து, பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம் (பிபிசி) மற்றும் பிபிசி இந்தியா ஆகியவை இந்தியப் பகுதியில் இருந்து செயல்படுவதை முழுமையாகத் தடை செய்யக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Readmore : ஆவணப்பட விவகாரம்.! பிபிசியை தடை செய்ய பொதுநல மனு.! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

2023-02-10 01:39 PM

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார் :

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டை பிரதம மந்திரி நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, “பால், மீன்வளம், விவசாயம், உணவு பதப்படுத்துதல் துறைகள் மற்றும் இயற்கை விவசாயம் ஆகியவற்றில் பல புதிய முயற்சிகள் உள்ளன. இன்று, இந்தியா பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் நமது விவசாயிகளின் உள்ளீட்டு செலவைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. எனவே இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் அதிக முயற்சி எடுத்து வருகிறோம்” என்று கூறினார்.

UP Global Investors 1
[Image Source : Twitter/@ANI]

2023-02-10 12:39 PM

மக்களவையில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு :

இந்திய மக்களவையில் மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் போதிய ஆசிரியர் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாத மருத்துவக் கல்லூரிகளை இயக்க நான் அனுமதிக்க மாட்டேன். மதுரையில் எய்ம்ஸ் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

சுகாதாரத்தை அரசியலின் பிரச்சினையாக ஆக்காதீர்கள் என்ற  சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆவேசமாக பதிலளித்தார். அவரது பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் இருந்து காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

2023-02-10 12:08 PM

மக்களவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் திமுக எம்பிக்கள் இடையே வாக்குவாதம் :

மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மாண்டவியா மற்றும் திமுக எம்பிக்கள் இடையே வாக்குவாதம் நடைப்பெறுகிறது. இதில் போதிய ஆசிரியர் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாத மருத்துவக் கல்லூரிகளை இயக்க நான் அனுமதிக்க மாட்டேன். மதுரையில் எய்ம்ஸ் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுகாதாரத்தை அரசியலின் பிரச்சினையாக ஆக்காதீர்கள் என்று சுகாதார அமைச்சர் மாண்டவியா கூறுகிறார்.

Health minister

2023-02-10 12:00 PM

உச்சநீதிமன்றத்துக்கு மேலும் இரு நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அறிவிப்பு :

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின்படி, மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர், அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.


2023-02-10 10:51 AM

உ.பி-யில் பைக் மீது ஸ்கூட்டர் மோதி விபத்து :

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மோதலினால் இரு சக்கர வாகனங்களில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். இதில் வாகன ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


2023-02-10 10:30 AM

லக்னோவில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு :

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டை பிரதம மந்திரி நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். 41 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், உயர்மட்ட தொழில்துறை தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், 10 கூட்டணி நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள்/தூதர்கள், முன்னணி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் சிஇஓக்கள் உட்பட 10,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டின் 34 அமர்வுகளில் பங்கேற்கின்றனர்.

pm modi

2023-02-10 10:18 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்