SSLV – D2 ராக்கெட் பயணம் வெற்றி – இஸ்ரோ தலைவர் அறிவிப்பு
நடப்பாண்டில் இஸ்ரோ மேற்கொண்ட முதல் ராக்கெட் வெற்றி பெற்றதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.
விண்ணில் பாய்ந்த SSLV – D2 ராக்கெட்:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, 3 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் SSLV – D2 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. 334 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள்கள், புவிவட்ட சுற்றுப்பாதையில், 356 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
SSLV திட்டம் முதல்முறையாக வெற்றி:
இந்த நிலையில், SSLV – D2 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 3 செயற்கைகோள்களும் புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். அதன்படி பூமியில் இருந்து 356 கிமீ உயரத்தில் செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. எனவே, நடப்பாண்டில் இஸ்ரோ மேற்கொண்ட முதல் ராக்கெட் வெற்றி அடைந்துள்ளது.
இதனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பூமி கண்காணிப்பு செயற்கைகோள் இஓஎஸ்.07, ஜானஸ்-1, ஆசாதி சாட்-2 ஆகிய செயற்கைகோள் SSLV – D2 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு, முதல் முறையாக (SSLV திட்டம்) பயணம் வெற்றி அடைந்துள்ளது.