SSLV-D2 ரக புதிய ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.!
இஸ்ரோ இன்று எஸ்எஸ்எல்வி-இன் D-2 ரக புதிய ராக்கெட்டை, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து, எஸ்எஸ்எல்வி-டி2 ரக ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. இஓஎஸ்-07, அந்தாரிஸின் ஜானஸ்-1 மற்றும் ஆசாடிசாட்-2 ஆகிய மூன்று செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
450 கிமீ சுற்று வட்டப் பாதையில் விண்வெளியில் நிலைநிறுத்த அனுப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரோவின் இந்த திட்டம் முதன்முறையாக வெற்றி அடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். <
#WATCH | Andhra Pradesh: ISRO launches Small Satellite Launch Vehicle-SSLV-D2- from Satish Dhawan Space Centre at Sriharikota to put three satellites EOS-07, Janus-1 & AzaadiSAT-2 satellites into a 450 km circular orbit pic.twitter.com/kab5kequYF
— ANI (@ANI) February 10, 2023
/p>