கர்நாடகாவில் புதிய விமானநிலையத்திற்கு, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பெயர்.!

Default Image

ஷிவமோகா விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பெயரிட  உள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

கர்நாடகாவின் ஷிவமோகாவில் கட்டப்பட்டுள்ள புதிய விமானநிலையத்திற்கு, கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா விமான நிலையம், என பெயரிட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ்  பொம்மை தெரிவித்தார். எடியூரப்பாவின் பெயரில் விமான நிலையத்திற்கு பெயர் வைக்க மாநில அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அவர் கூறினார்.

பிப்ரவரி 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த விமான நிலையத்தை திறந்து வைப்பார் என்றும், பெங்களூருக்கு அடுத்தபடியாக மாநிலத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக ஷிவமோகா உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஷிமோகாவில் இந்த விமான நிலைய கட்டுமானப் பணிகள் வெறும் 18 மாதங்களில் முடிவடைந்துள்ளது.

இந்த விமான நிலையத்தால், கல்வி, தொழில், பொருளாதாரம், சுற்றுலா உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மாவட்டம் வளர்ச்சி அடையும் என்று பொம்மை மேலும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்