எதிர்கட்சினர் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலரும்.! கடும் அமளிக்கு நடுவே பிரதமர் உரை.!

Default Image

  எதிர்க்கட்சியினர் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலரும் எனவும், எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் தாமரை மலரும். – பிரதமர் மோடி உரை. 

இன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அவர் பேச ஆரம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள், அதானி குழுமத்தில் எல்ஐசி செய்துள்ள முதலீடுகள் குறித்தும், அதானி குழுமத்திற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கொடுத்த கடன்கள் குறித்தும் விசாரணை செய்ய வேண்டும் எனவும், இந்த விசாரணையை நாடாளுமன்ற கூட்டு குழு மேற்கொள்ள வேண்டும் என தொடர் அமளியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அவர் கூறுகையில்,  எதிர்க்கட்சியினர் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலரும் எனவும், எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் தாமரை மலரும் எனவும், கூறினார். மேலும், நாடாளுமன்றத்தில் பல உறுப்பினர்களின் நடவடிக்கை மற்றும் உரைகள் தனக்கு ஏமாற்றம் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்து காங்கிரஸ் கட்சிகள் மீது தனது விமர்சனத்தையும் முன்வைத்தார். அதில் காங்கிரஸ் கட்சியினர் எவ்வளவு தோல்விகளை கண்டாலும் தங்கள் தவறை உணரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் பிரச்சனைகளுக்கு நாங்கள் நிரந்தர தீர்வுகளை கண்டு வருகிறோம். எனவும் தனது உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்