ட்விட்டர்’ ப்ளூ டிக்’ வேண்டுமா.? இதோ வெளியானது கட்டண விவரம்.!

Default Image

ட்விட்டர் அதன் ட்விட்டர் ப்ளூவிற்கான (Twiter Blue) சந்தா சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

உலக பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க்கின் ட்விட்டர் நிறுவனம், அதன் ட்விட்டர் ப்ளூ சேவைக்கான மாதாந்திர மற்றும் வருடாந்திர சந்தா சேவையை இந்தியாவில் அறிமுகபடுத்தியுள்ளது.

ட்விட்டர் ப்ளூ (Twiter Blue) என்றால் என்ன..? 

ட்விட்டர் ப்ளூ என்பது பயனர்களின் கணக்கில் நீல நிறச் (blue checkmark) செக்மார்க் அடையாளத்தை வழங்குகிறது மற்றும் ட்விட்டர் ப்ளூ அம்சங்களுக்கான ஆரம்ப அணுகல்களான ட்வீட்டை எடிட் செய்தல், ட்வீட்டை செயல்தவிர்த்தல், நீண்ட மற்றும் உயர்தர வீடியோக்களை இடுகையிடும் திறன் போன்ற பல சலுகைகளை வழங்குகிறது. ட்விட்டர் புளூ சேவையை மேம்படுத்துவதால் அதில் சேர்க்கப்பட்டுள்ள அம்சங்கள் எந்த நேரத்திலும் மாற்றப்படலாம்.

Twitter Blue
[Image Source : Twitter]

ட்விட்டர் ப்ளூவில் சேர்வது எப்படி.?

ட்விட்டரின் இணையதளத்தில், இடது புறம் உள்ள மெனுவில் ‘ட்விட்டர் ப்ளூ’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாப்-அப்பில் உங்களுக்கு விருப்பமான திட்டத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். பின்னர் அந்த திட்டத்திற்கான கட்டணத்தை செலுத்தியதும் இணையதளத்தில் இந்த சேவையை அணுக முடியும்.

Twitter Account
[Representative Image]

Android மற்றும் iOS இல், ட்விட்டரின் மெனுவில் ‘ட்விட்டர் ப்ளூ’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாப்-அப்பில் வரும் திட்டத்தை தேர்வு செய்து  கட்டணம் செலுத்தியதும் மொபைல் போனில் இந்த சேவையை அணுக முடியும். மொபைல் போனில் தற்பொழுது மாதாந்திர ட்விட்டர் பிரீமியம் சேவையை மட்டுமே அணுக முடியும்.

ட்விட்டர் ப்ளூ சேவை கட்டண விவரம் :

ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் (iOS) மொபைல் போன் மூலம் ட்விட்டர் ப்ளுவில் இணையும் பயனர்கள் மாதக் கட்டணமாக ரூ.900 செலுத்த வேண்டும். மொபைல் பயனர்களை விட இணைய பயனர்களுக்கு கட்டணம் குறைவாக உள்ளது.

TwitterBluesubscriptionplans
[Image Source : Dinasuvadu]

ட்விட்டர் ப்ளூவை இணையதளம் வழியாக அணுகுபவர்களுக்கு மாதாந்திர கட்டணமாக ரூ.650 செலுத்தவேண்டும். இதில் வருடத்திற்கு மாதாந்திர கட்டணம் ரூ.7,800 செலவாகும். வருடாந்திர சந்தாவை பெற வருடத்திற்கு ரூ.6800 அல்லது மாதத்திற்கு ரூ.566 செலவாகும். கடந்த 30 நாட்களுக்கும் மேலாக உங்கள் கணக்கு செயலிழந்திருந்தால், Twitter Blue சந்தாவை உங்களால் வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்