புது வீடு வாங்கிய நடிகை சமந்தா.! விலை எவ்வளவு தெரியுமா..?
நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய்யில் இருந்து மெதுவாக மீண்டு வருகிறார். மீண்டும் தான் கமிட் ஆகியுள்ள படங்களில் நடிக்கவும் தொடங்கிவிட்டார். அதன்படி, குஷி , வருண் தவானுடன் இணைந்து நடிக்கவிருக்கும் ‘சிட்டாடல்’ வெப் தொடர் ஆகிய வற்றில் நடிக்க தொடங்கிவிட்டார்.
இதற்கிடையில், சமந்தா மும்பையில் புதிதாக விடு வாங்கியுள்ளார்.மூன்று படுக்கையறைகள் கொண்ட ஆடம்பரமான அபார்ட்மெண்டை கடற்கரையை பார்த்து ரசிக்கும் படி ஒரு வீடு ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சமந்தா சூரியன் அஸ்தமன காட்சியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படமும் அவர் புதிதாக வாங்கியுள்ள அபார்ட்மெண்ட் வீட்டில் இருந்ததுதானாம். கிட்டத்தட்ட இந்த வீட்டை சமந்தா 15 கோடிகளுக்கு வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இவரை போலவே நடிகை ராஷ்மிகா மந்தனா மும்பையில் வீடு வாங்கியிருந்தார்.
மேலும் நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் முன்னதாக பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.