2 நாட்களுக்கு சென்னை, வடதமிழகத்தில் அதிக வெப்பம் நீடிக்கும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம்,சென்னை உட்பட வடதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
வங்ககடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த பகுதிகள் வலுவிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் தெளிவாக காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்திலும் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.