ஸ்மார்போனால் கண் பாதிப்பை சந்தித்த இளம்பெண்..! மருத்துவரின் விளக்கம்..!
இரவு நேரத்தில் அதிக நேரம் ஸ்மார்ட் போன் உபயோகித்ததால் கண்பாதிப்பு ஏற்படும் என மருத்துவர் ட்வீட்.
இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஸ்மார்ட் ஃபோன்களை உபயோகிக்கின்றனர். ஆனால் பலர் இந்த ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாகி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த ஸ்மார்ட் ஃபோன் இல்லாமல் பலரால் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இந்த நிலை அவர்களது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மருத்துவரின் ட்வீட்
அந்த வகையில் ஹைதராபாத் சேர்ந்த டாக்டர் சுதீர் குமார் சமீபத்தில் ஒரு ட்விட்டர் பதிவை பதிவிட்டார். அந்த பதிவில், வழக்கமான நடத்தையின் விளைவாக ஒரு இளம் பெண்ணின் பார்வை எவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டது என விளக்கியிருந்தார்.
ஸ்மார்ட்போனால் கண் பாதிப்பு
அதன்படி, 30 வயதான மஞ்சு, இருட்டில் தனது தொலைபேசியில் அதிக நேரம் செலவளித்துள்ளார். பின்னர் அப்பெண்ணுக்கு பார்வைக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவரின் கூற்றுப்படி, ஒளியின் தீவிர ஃப்ளாஷ்கள், இருண்ட ஜிக்ஜாக் வடிவங்கள் மற்றும் எப்போதாவது பார்வை இல்லாமை போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது.
பல வினாடிகள் அவளால் எதையும் பார்க்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இது பெரும்பாலும் இரவில் அவள் கழிப்பறையைப் பயன்படுத்த எழுந்தபோது நிகழ்ந்தது. பின் அவர் ஒரு கண் மருத்துவரை அணுகியுள்ளார். நரம்பியல் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய செயல்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
குழந்தையைப் பராமரிப்பதற்காக அவள் அழகுக்கலை நிபுணராக இருந்த வேலையை விட்டுவிட்ட பிறகு அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. இரவு நேரங்களில் மட்டுமல்லாது, தினமும் பல மணிநேரம் தனது நேரத்தை ஸ்மார்ட்ஃபோனில் செலவளித்துள்ளார்.
விஷன் சிண்ட்ரோம்
இதனையறிந்த மருத்துவர்கள், அப்பெண் ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் (SVS) நோயால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். கணினிகள், ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லெட்டுகள் போன்ற சாதனங்களின் நீண்ட காலப் பயன்பாடு, “கணினி பார்வை நோய்க்குறி” (CVS) அல்லது “டிஜிட்டல் பார்வை நோய்க்குறி” என குறிப்பிடப்படும் பல்வேறு கண் தொடர்பான செயலிழப்பு அறிகுறிகளை ஏற்படுத்தும்.
ஆனால், அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர், எந்த விசாரணைக்கும் உத்தரவிடவில்லை, எந்த மருந்துகளையும் பரிந்துரைக்கவில்லை. அவளது பார்வைக் குறைபாட்டிற்கான சாத்தியமான காரணத்தைப் பற்றி அவளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் அவளது ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதைக் குறைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டாக்டர் சுதிர் அந்தப் பெண்ணின் மனநிலையைப் பற்றியும் பேசினார், மஞ்சு தனது மூளை நரம்புகளில் ஏதோ கெட்டது என்று பயந்து கவலைப்பட்டாள், ஆனால் சரியான நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்தாள். அவள் நான் எனது ஸ்மார்ட்ஃபோனை பார்ப்பதை நிறுத்திவிடுவேன், முற்றிலும் அவசியமானால் தவிர, பொழுது போக்கிற்காக எனது செல்போனை பயன்படுத்த மாட்டேன் என கூறியதாக மருத்துவர் ட்வீட்டில் கூறியுள்ளார்.
11a. Spectral peaks for smartphones are very similar to short-wavelength blue visible light. Damage to retina caused by light, especially blue light is well-established.
A case of retina damage causing blurring of vision in both eyes due to smartphone use at nights was reported.— Dr Sudhir Kumar MD DM???????? (@hyderabaddoctor) February 6, 2023