AK62 இசையமைப்பாளர் யார் தெரியுமா..? வெளியான சூப்பர் தகவல்.!

Default Image

அஜித் ரசிகர்கள் தற்போது AK62 திரைப்படத்தை யார் தான் இயக்கப்போகிறார்கள் என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். முன்னதாக படத்தை லைக்கா நிறுவனம் AK62  திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பார் என்று அறிவித்திருந்தது.

Vignesh Sivan quits AK62
Vignesh Sivan quits AK62 [Image Source: Twitter ]

பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் இருந்த AK62 படத்தின் பெரிய நிக்கி படத்தை தான் இயக்கவில்லை என்பதற்கான குறீயிடை கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து AK62 படத்தை யார் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ak62
ak62 [Image Source: Twitter ]

ஒரு பக்கம் AK62 திரைப்படத்தை தடம் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றும் தகவல்கள் கசிந்துள்ளது. இந்த வாரம் படத்தை யார் இயக்க போகிறார் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Santhosh Narayanan (@musicsanthosh)

இதற்கிடையில், AK62 திரைப்படத்திற்கு யார் இசையமைக்க போகிறார் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி அஜித் படத்திற்கு பிரபல முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்கவுள்ளாராம். இந்த தகவல் வைரலாகி வந்த நிலையில், சந்தோஷ் நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியீட்டு VIBE என உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் AK62 படத்திற்கு அவர் இசையமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்