அண்ணா சாலை விபத்து.! ஒரு பெண் உயிரிழப்பு.! ஒப்பந்ததாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி.!
அண்ணா சாலை கட்டிட விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த மாதம் (ஜனவரி) 27ஆம் தேதி சென்னை அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு பகுதியில் பழைய பயன்படுத்தப்படாத கட்டடம் ஒன்று இடிக்கப்படும் வேலை நடந்து வந்தது. அந்த சமயம் உரிய பாதுகாப்பு தடுப்பு வசதிகள் இந்த இடிப்பு நடவடிக்கை நடைபெற்றுள்ளது.
அப்போது அந்த வழியாக வங்கி ஊழியர் பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது, திடீரென அந்த கட்டட சுவர் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியதில் இடிபாடுகளில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பை தொடர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது, ஒப்பந்ததாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.