காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு ட்விட்டர் கணக்கு முடக்கம்.! சென்னை காவல் ஆணையரிடம் புகார்.!

Default Image

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சிறுபான்மையினர் பிரிவினரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் திடீரென முடக்கம்.

ட்விட்டர் கணக்கு முடக்கம் – காங்கிரஸ் புகார்:

CONGRESSTWITTER

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு சமூக வலைத்தள பக்கத்தை திடீரென மர்ம நபர்கள் முடக்கியுள்ளதாக சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். சமூக விரோத செயல்கள் நடக்கும் முன்பு ட்விட்டர் பக்கத்தை முடக்கியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் மூலம் மக்களுடன் தொடர்பு:

TWITTERPEPOLE

பிரதான அரசியல் கட்சிகள் சமூக வலைத்தளங்கள் மூலம் கட்சியின் செயல்பாடு, தலைவர்கள் பேச்சு, என பல்வேறு விதமாக மக்களுடன் தொடர்பில் இருப்பதற்கு பயன்படுத்துகிறது. அந்தவகையில், காங்கிரஸ் கட்சியும் பல்வேறு சமூக வலைதள பக்கங்களை வைத்துள்ளது.

அதன்படி, காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சிறுபான்மையினர் பிரிவினரும் ட்விட்டர் மூலம் மக்களுடன் தொடர்பில் உள்ளனர். இதில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, முக்கிய தலைவர்களின் பேச்சுகள், சிறுபான்மை மக்களுக்காக காங்கிரஸ் கட்சி செய்த திட்டங்கள், செயல்பாடு குறித்த விபரங்கள் @TNCCMinority இந்த ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்று வருகின்றன.

அரபு மொழியில் பயாே விபரங்கள்:

CONGRESSWOW

இந்த சமயத்தில் தான் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சிறுபான்மையினர் பிரிவினருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் திடீரென்று மர்ம நபர்களால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. முடக்கம் செய்யப்பட்டுள்ள மிழ்நாடு சிறுபான்மையினர் பிரிவினருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் wow store எனும் முகப்பு போட்டோ பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரபு மொழியில் பயாே விபரங்கள் எழுதப்பட்டுள்ளது. அதில், நவீன செல்போன் மற்றும் சோனி சாதனங்களை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்ற ஸ்டோர் இது. நீங்கள் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளலாம் எனும் வகையில் பயோவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காவல் ஆணையரிடம் புகார்:

CTA

இந்த நிலையில், சமூக விரோத செயல்கள் நடக்கும் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு ட்விட்டர் பக்கத்தை முடக்கியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா புகார் கொடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்