மீண்டும் சரிவை நோக்கி நகரும் அதானி குழுமத்தின் பங்குகள்…

Default Image

அதானி நிறுவன பங்குகளின் விலை நேற்று கொஞ்சம் மீண்டு வந்த நிலையில், இன்று மீண்டும் சரிவை நோக்கி பயணித்து வருகிறது.

ஹின்டன்பர்க் அறிக்கை : அமெரிக்கா ஹின்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. தொடர்ந்து மூன்றாவது வாரமாக அதானி குழும பங்குகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக உலக பணக்காரர்கள் வரிசை பட்டியலில் டாப் 10இல் இருந்து சரிவை நோக்கி பயணித்து வருகிறார் கௌதம் அதானி.

அதானி பங்குகள் ஏற்றம் : நேற்று அதானி பங்குகளின் நிலை கொஞ்சம் மீண்டு வந்த நிலையில், இன்று மீண்டும் சரிவை நோக்கி பயணித்து வருகிறது. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் நேற்று ஒரு நாள் மட்டும் சிறிது ஏற்றம் கண்டது. அதன் பிறகு இன்று மீண்டும் சரிய தொடங்கி உள்ளது. அதானி என்டர்பிரைசஸ் பங்கின் விலை 7323 புள்ளிகள் குறைந்து  1,834-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

adani 4

மீண்டும் சரிவு : அதனை போல, அதானி போர்ட்ஸ் நிறுவன பங்கு விலையும் 44 புள்ளிகள் குறைந்து 554-ல் நிலை கொண்டு வருகிறது. அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலையானது 79 புள்ளிகள் குறைந்து 172ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலை 765 குறைந்து 1,248ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.  அதானி கிரீன் எனர்ஜி பங்கின் விலை 38 சரிந்து 7763-ஆகவும், அதே போல, டோட்டல் கேஸ் பங்கின் விலை 769 சரிந்து 1,324-ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலை 3 குறைந்து 415-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று பங்கு சந்தை முடியும் தருவாயில் உள்ள நிலைமையை பின்னர் பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்