இன்று இலங்கை செல்கிறார் அண்ணாமலை..! என்ன காரணம் தெரியுமா..?
விரைவில் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று அண்ணாமலை பேட்டி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு வேட்பாளர் அறிமுகம் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக அழைப்பு கொடுத்திருந்தது.
அண்ணாமலை இலங்கை பயணம்
ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று அண்ணாமலையும், மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்களும் இலங்கை பயணம் மேற்கில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பாஜக அரசு வந்ததற்கு பின்பு மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு குறைந்துள்ளது. விரைவில் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்