#Breaking: துருக்கி, சிரியா பலி எண்ணிக்கை தொடர் உயர்வு; 15000ஜக் கடந்தது.!
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு இதுவரை 15000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களால் பல மாடிக் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின, இதில் இடிபாடுகளில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இங்கு மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் துருக்கி மற்றும் சிரியாவில் மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 15000 ஜக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.