துருக்கி நிலநடுக்கம்; மீட்பு பணிகள் தீவிரம், பலி எண்ணிக்கை 12000 ஆக உயர்வு.!
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 12,000-ஐக் கடந்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களால் பல மாடிக் கட்டிடங்கள் எல்லாம் சீட்டுக்கட்டு சரிவது போல் இடிந்து விழுந்து சரிந்தன. இயற்கையின் இந்த கோர தாண்டவத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர், மற்றும் படுகாயமடைந்தனர்.
இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை பல சர்வதேச நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவிலிருந்தும் மீட்புக்குழுவினர், ராணுவத்தின் மோப்ப நாய்களுடனும் மற்றும் மருத்துவ உதவிக்குழுவும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இந்திய மீட்புக்குழுவினரும் அங்கு துரிதமாக செயல்பட்டு தேடி வருகின்றனர். மருத்துவ குழுவும் தேவையான மருத்துவ உதவிகளை செய்த் வருகின்றனர். இந்த பேரழிவு கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட பேரழிவுகளில் மிகவும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. துருக்கி மற்றும் சிரியாவில் ஒட்டுமொத்தமாக இந்த பேரழிவுக்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,000 ஐயும் கடந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.