ஒன்றாக சேர்ந்து பாஜகவை விரட்டி அடித்த எதிர்கட்சிகள்!மாஜ்வாதி வேட்பாளர் அபார வெற்றி
இன்று நான்கு மக்களவை,10 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா மற்றும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள நேரத்தில் மக்களவையில் மோடி அரசின் செல்வாக்கை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என்று கருதப்படுகிறது. இதே போன்று கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பத்து சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகின்றன.
நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒன்றுபட்டு களம் இறங்கிய எதிர்கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.
இவற்றில் உ.பி. கைரானா மக்களவை தொகுதி மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அங்கு, பாஜக எம்.பி. ஹுக்கும் சிங் காலமானார். அந்தத் தொகுதியில் ஹுக்கும் சிங்கின் மகள் மிரிகங்கா சிங் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக்தள் சார்பில் தபசம் ஹசன் களமிறங்கி உள்ளார். இவருக்குக் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
இந்த தொகுதியில் ராஷ்டிரிய லோக்தள் சார்பில் தபசம் ஹசன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளரால் தொட முடியாத அளவு முன்னிலை வித்தியாசம் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக வேட்பாளரை விட, தபசம் ஹசன் 36,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.
உ.பி.யின் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் 6,211 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.